விவசாயின் தற்கொலைக்கு காரணம்

அனைத்து தானத்திலும் சிறந்தது
அன்னதானம்;
அத்தானத்தை பெற்றெடுத்தவனோ..?
அநாதையாக்கப் பட்டான்
அரசாங்கத்தால்...

அவன் நினைத்திருந்தால்...?
அந்த காணி நிலத்தையும் விற்று..,
அத்தனை தொழில்களையும் செய்திடலாம்...
அதனை விரும்பிடாது
அரையான் கயிற்றில்
அரைகொமனத் துணியோடு
அல்லும் பகலும்
அவன் வளர்க்கும் பயிரை
அடுத்த வாரிசாக நினைத்து
அர்பணிப்பான் அவன் வாழ்க்கையை...

அடிகிணற்றில் தண்ணிரியில்லை..
அமிர்த மழையோ பொய்த்தது..
அழும் தாவரத்தை நினைத்து
அழுதிட்டான்...

ஆண்டவனுக்கும் புரியவில்லை
அவன் அவஸ்தைகள்
அரசாங்கமும்
அழுகிணி ஆட்டம்
ஆடுகிறது அனுதினமும்...

அதற்கு மேல்
அவகாசமில்லை..
அரளி விதைக்குள்
அடங்கிப் போனது
அவன் உயிர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலாரின்
வழித்தோன்றல்கள்...

அர்த்தம் காண விளைகிறது
அறிவிலி கூட்டமொன்று...
அவன் மரணமும்
அரசியலாக்கப் பட்டது...

அர்த்தமற்ற மரணமாக
அயோக்கியவாதிகளால்...

அவன் குடும்பபிரச்சனை யென்று...?
ஆயிரமாயிரம் பிரச்சனைகள்
அவன் காணாது
அறுபது வயதை எட்டியதெப்படி..?

மூப்பின் காரணமாம்..?
மூக்குமுட்ட பிரியாணி தின்னும்
மூடனே..!
முடிந்தால்
முக்கால்மணி நேரம்
முழங்காலிட்டு நின்று பார்..
மூச்சித் திணறி
முந்நூறு முறை செத்திடுவாய்
முட்டி செத்த நாயே..!

முதல்நாள் சோறு
மூன்று வெங்காயத்தோடு..
மூன்று சூரியனையும்
முகர்ந்திடுவான் – அந்த
மூப்பின் முதியவன்...
முதியோனின் நேசம் அப்படி..!


நோய் காரணமா..?
நோய்தான்.! புற்றுநோய்..!
நான்கு வேளை
நாற்பது மாத்திரை
நாறிப்போன உடம்பு
நாய்பொலப்பு வாழ்க்கை
நானும் அரசியால்வாதிதான் என
நமத்துப்போன வார்த்தைகள்
நயவஞ்சக வாழ்க்கை
நல்ல செயலோ...? வேண்டாம் ...?
நல்ல வார்த்தை யொன்று..
நாட்டுக்குச் சொல்லாத
நரிகளே..!
நானறிந்த வகையில் நீங்கள்தான்
நாட்டுக்குப் புற்றுநோய்..!

கசாயமும்
கஞ்சியும் போதும்..
கடுகளவும் நோயுமில்லை
கறுத்த உடம்பும்
கண்ணிப்போகும்வரை
கழனி வேலை செய்திடுவான்
கடவுளெனும் விவசாயி..!

தூக்கு கயிற்றை
தொட்டுப்பார்...
துயரம் தெரியும்
தெரியவில்லை யெனில்
தொங்கிப்பார்...

எலிக்கறி தின்றவனுக்குத் தெரியும்
எலி விஷம் எத்தனை கொடியதென...

கடன் பெற்று விதைத்தான்..
காரியம் செய்ய
கால்காசும் மில்லை..
கடன் கழுத்தை நெரிக்க...
கடமை தவறிய அரசும்
காவல் தெய்வமும் கைவிட...
கறைபடிந்த நாணயம்
கவிழ்ந்த தலையோடு
கலியுக கடவுள்
காயம்பட்ட கழுத்தை
கயிற்றுக்குக் கொடுத்திட்டான்.

நேர்மையும்
நேசமும் கொண்டவனுக்கு
தேசம் கொடுத்ததென்ன..?

அவன் விளைத்ததை தின்று
அவனுக்கே வாய்கரிசிப் போடும்
அறிவிலிகளே..!

பணநோட்டைத் தின்னும்
பரதேசிகளே..!
பரிகாசம் செய்யாதீர்கள்..

மனிதநேயம் கிடையாது..
மனசாட்சியாவது உண்டோ..
மலம் தின்னும் பன்றிகளோ..?

விவசாயின் பெயரில் திருடுபவனை
கண்டுபுடிக்கத் தெரியாதென்றால்...
கஜானாவின் காவலாளி
பதவி எதற்கு..?

முதுகெலும்பு விவசாயம்
முடங்கிவிட்டால்...
முன்னேற்றம் எப்படி..?

******************
சிகுவரா
29/4/2017

எழுதியவர் : சிகுவரா (21-May-17, 4:26 pm)
பார்வை : 909

மேலே