சித்திரம் ஆனாதடி என் மனசு

நீ தொட்டு நிற்கும் சுவரும் "சித்திரம் ஆனாதடி " உன் வருகையாலே..!

நின்று நீ பார்க்கும் வட்ட விழி பார்வையும் உன்னை புகைப்படம் எடுத்த கருவியை கழங்கம் செய்கிறதடி..!

மதில் சுவரும் ஓவியம் ஆனாது உன்னாலோ..!

உன் புகைப்படம் எடுத்த கருவி ஊமை ஆனாது உன் பெண்மையின் விழியாலோ...!

நீ கட்டி நிற்கும் சேலைக்கும் சொர்கம் போல் இருக்குமேடி உன் தேகத்தை தொட்டு நிற்க..!

உன் வட்டவிழி பார்வையை எதிர் நோக்கும் திறன் உன்னை சேலையோடு கட்டி அனைக்கும் ஒருவனுக்கே சொந்தமடி..!

நீ தொட்ட சுவருக்கும் சொர்க்கம் ஆனாதடி..!

நீ தொட போகும் உன் உற்றவனுக்கும் நீயே சொர்கமாய் ஆவாயடி...!

உன்னை குழிப்பாட்டும் நீருக்கும் சொர்க்கம்தானடி..! உன் செங்கந்தாள் மேனியை ஸ்பரிசம் செய்து போக..!

உன் கண்ணுக்கும் நெற்றிக்குமே காதல் செய்யுதடி நீ ஏந்திய பொட்டும் புடவையும்..!

உன் கண் இமைக்கும் நொடி போதுமடி,ஒரு நொடியில் உன் உற்றவன் மனம் கணம் கொள்ளுமடி..!

உன் மூக்கிற்கு கீழ் இருக்கும் இதழோ உன்னை கட்டி அனைக்கும் ஒருவனுக்கு சொர்கமடி..!
சொர்க்கமே நீ என்றால் அதுவே பெண்மையின் உயிர்மையடி...!
---------

எழுதியவர் : விமல் வர்மன் (21-May-17, 5:11 pm)
சேர்த்தது : விமல்திரு
பார்வை : 123

மேலே