இதய பரிமாற்றம்

என்னுள் துடிக்கும் இதயம்
என் வசம் இல்லாமல் இம்சிக்கின்றது
காரணம்
உன் நினைவுகள்
உன்னை சந்தித்த நாள் முதலே
தொடங்கிவிட்டது
இந்த பிரச்சனை
தீர்வு காண முயல்கின்றேன்
முடியாமல் தவிக்கின்றேன்
இறுதியில்
உன்னிடமே தஞ்சம் அடைந்தேன்
என் இதயம் கொடுத்தேன்
என் காதலை ஏற்றாய்....
மகிழ்வோடு
உன் இதயம் கொடுத்தாய்.....!
என் இதயம் இருந்த இடத்தில்
உன் இதயம் துடிக்க கண்டேன்...
இப்பொழுது தான்
சுகமாய் உணர்கிறேன்...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (23-May-17, 12:10 am)
சேர்த்தது : நித்யஸ்ரீ சரவணன்
Tanglish : ithaya parimaatram
பார்வை : 407

மேலே