அன்பே

அன்பே...
உன் காதலுக்காக காத்திருந்தேன்
பல வருடங்களாக....!
என் முன் வந்தாய்
ஒரு நாள்..!
அந்நாள் என் வாழ்வின்
பொன்னாள் என எண்ணினேன்...
காதலை சொல்ல வந்திருக்கிறாய்
என்ற எதிர்பார்ப்புடன்
இருந்த என்னிடம்
உனது திருமண பத்திரிகையை
நீட்டினாய்....!
என் இதயம் உடைந்து சிதறியதடா
கண்ணாடியாய்...
சிதறிய ஒவ்வொரு சில்லிலும்
உன் முகமே தெரியுதடா....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (22-May-17, 11:49 pm)
சேர்த்தது : நித்யஸ்ரீ சரவணன்
Tanglish : annpae
பார்வை : 238

மேலே