பேதை மனம்
இமை மூடினாலும்
புரண்டு புரண்டு படுத்தாலும்
தூக்கம் வருவதில்லை....
துன்பத்தில் உலவும் மனதிலோ
அமைதி இல்லை...
கடந்த கால நினைவின் சுவடும்
எதிர் கால வலிகளின் பயமும்
நெஞ்சத்தை தாக்குகின்றன....
காதலை மறுத்த அவனை
மறக்கவும் முடியாமல்
நினைவுகளில் மூழ்கவும் முடியாமல்
தரையில் விழுந்த மீனென துடிக்கும் மனத்தை
அடக்கவும் முடியாமல்
இன்பத்தை துறந்து
துன்பத்தை துணை கொண்ட
இப் பேதையின்
காதல் கொண்ட மனதிற்கு
கஷ்டம் தான் தீர்வா...?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
