கோத்த பதர்கொள் குலைநிமிர்வே கொள்ளும் - இன்னிசை இருநூறு 196

'த்' எதுகைக்கு 'ய்' ஆசிடையிட்ட - கா'ய்'த்த, வா'ய்'த்தலிலை - இன்னிசை வெண்பா

கா'ய்'த்த விளைநெற் கதிரிறைஞ்சல் காண்டுமால்
கோத்த பதர்கொள் குலைநிமிர்வே கொள்ளுமுல(கு)
ஏத்தும் அறிஞர்க் கியல்பு பணிவுடைமை
வா'ய்'த்தலிலை பேதை வயின். 196 மேல் கீழியல்பு,

இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார், சோழவந்தான்.

பொருளுரை: நல்ல விளைச்சலினால் முற்றிய நெற்கதிர்கள் தாழ்ந்து நிலம் நோக்கி வளைந்திருக்கும்; விளைச்சலில்லாத பதருள்ள குலைகள் நிமிர்ந்திருக்கும்.

அதுபோல, உலகத்தினரால் புகழப்படும் அறிஞர்களின் இயல்பு பணிவுடைமை ஆகும்; அத்தகைய பணிவு கீழான குணம் கொண்ட பேதையர்க்கு வாய்ப்பதில்லை என சோழவந்தான் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் இன்னிசை இருநூறு நூலில் கூறுகிறார்.

இறைஞ்சு-தல்
1. To hang low, as a cluster of coconuts; to bow, bend; தாழ்தல். குலையிறைஞ்சிய கோட் டாழை (புறநா. 17, 9).
2. To fall down; வீழ்ந்து கிடத்தல். புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித்.
3, To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating; வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21).

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-17, 9:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே