நிறைய பேசணும்

உள்ளிருக்கும்
உன்
நினைவுகள்.....

உறக்கத்தில்
வரும்
கனவுகள்......

தனிமைக்குத்
துணையாகும்
தலையணைகள்......

முகம் பார்க்கும்
நேரமெல்லாம்
உன்முகம்
காட்டும்
கண்ணாடி.......

என்
பயணத்தில்
காலி இருக்கை....அங்கே
நீ........

கோவிலில்
நான்
மட்டும்......நீ
தான்
வரமாக.......

சாலையோர
நடையில்......
கைகோர்க்கும்
உன்
நினைவு.......

ஒன்றாய்
உண்ட
ஒரு நேர
உணவு.....

பூக்கள்
நம்மை
ரசித்த
பூங்கா
நாட்கள்......

மழலைகள்
பார்த்திருக்க
குழந்தையாய்
குறும்பாய்
இருந்த
கொஞ்ச
நேரம்......

முத்தம் தந்து
முத்தம்
வாங்கி.....
முடிந்துபோன
முதல்
இதழ் யுத்தம்......

உன்னோடு
வாழத்தான்
என்னோடு
உன்
எண்ணங்கள்......

எழுதியவர் : thampu (2-Jun-17, 3:11 am)
Tanglish : niraiya pesanum
பார்வை : 826

மேலே