ஆண் பெண் தோழமை

ஒரு பெண்ணை தோழியாக ஏற்று
அவளின் சுக, துக்கங்களில் பங்கு
கொள்கிற ஒருவன்

அவள் தவறிழைக்கும் போது தந்தையாக...

தனித்து செல்கையில் சகோதரனாக...

துவண்டு போகையில் தோழனாக வலம் வருகிறான்...

அவர்களின்
சுய நலமில்லா அன்பையும்...
கபடமில்லா உறவையும்...
களங்கமற்ற நட்பையும்...
புரிந்து கொள்ளாத
நாகரீக உலகத்தில்
சமூகத்தின் பார்வை
முக்கிய அங்கம் பெறுகிறது.

அது தன் கண்களால்
நட்பை காதலாகவும், காதலை காமமாகவும்
உருவகபப்படுத்தி உலகிற்கு எடுத்து செல்வதால்...
தூற்றப்படுகிறாள்.

எழுதியவர் : பாரதி (3-Jun-17, 11:26 am)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : an pen tholamai
பார்வை : 350

மேலே