எல்லாம் பேர்லதான்-நகைச்சுவை

டாக்டர் (நோயாளியை நோக்கி): என்னப்பா உனக்கு
உடம்புக்கு என்ன

நோயாளி : ஐயா எனக்கு தூக்கமே வரமாட்டேனுது
என்ன செய்ய
டாக்டர் (நோயாளியை பரிசோதித்து பின்னர்) சரி உன் பெயர்
சொல்லு ....................
நோயாளி : உறங்காப்புளி !

டாக்டர் ; உன் பெரு கேட்டேன் சொல்லு

நோயாளி : அதான் ஐயா என் பேரு; எங்க ஊரு புளிய
மரம் உறங்கா புளி அது தெய்வீகமானதுனு
சொல்லுவாங்க கும்பிடுவாங்க...........அதன்
பேர்தான் எங்க ஆத்தா எனக்கு வெச்சிருக்கு

டாக்டர் : அப்பா நீ ஒன்னு பண்ணு- உன் பெயரை உன்
ஆத்தா கிட்ட சொல்லி மாத்திக்கோ ......
இந்த நான் குடுத்த மாத்திரையை படுக்க
போகும்போது போட்டுக்கோ ௪ நாளைக்கு
பெரிய தூக்கம் வரும் .....................
எல்லாம் பேர் ல இருக்கு தெரிஞ்சிக்கோ

நோயாளி : சரிங்க ஐயா .............. அப்படியே

இரண்டு நாள் கழிச்சு நோயாளி டாக்டர் கிட்டே வாரான் )

டாக்டர் : என்னைய உறங்காப்புளி இப்போ எப்படி
தூங்கற......

நோயாளி : இப்போ என் பேரு உறங்குபுளி
நீங்க குடுத்த மாத்திரை தினமும்
ராத்திரி போட்டுக்கிறேனுங்க , நல்லா
தூங்கறேன்.........

டாக்டர் : சொன்னேன் பாத்தாயா..... பேர மாத்தினே
தூக்கம் வருது .............எல்லாம் பேர்லதான் ...
நான் குடுத்த மாத்திரை வெறும் டம்மி ....!!!!!!

நோயாளி : அப்டீங்களா ......................!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-17, 3:36 pm)
பார்வை : 345

சிறந்த நகைச்சுவைகள்

மேலே