பசு வதை தடுப்பு பற்றி - ராமு-சோமு உரையாடல் - நகைச்சுவை , சிந்திக்க, சிரிக்க

ராமு : டேய் சோமு இந்த பசு வதை தடுப்பை
சட்டத்தை எதிர்த்து சில மாநிலங்களில்
மும்முரமாக சிலர் போராடுவது ........
நியூஸ் இல் வந்தவண்ணம் இருக்கு
நீ என்னடா நினைக்கற இதைப்பத்தி .......


சோமு : ஐயா ராமு ஐயா, ஒரு மனசு உருகும்
செய்தி படித்தேன் ................அசர்ந்துட்டேன்
இப்படி கூட மனிதர்களா...................னு


ராமு : அப்படி என்னய்யா படிச்ச .............

சோமு : : அத எப்படி ஐயா சொல்லுவது ..............
ஒரு மாநிலத்தில் அரசு சட்டத்தை எதிர்த்து
கூடியிருந்த சிலர் ஒரு பச்சிளம் பசுவின் கன்றை
கூடியிருந்த அதே இடத்தில் கதற கதற வெட்டி
கொன்று, அதன் மாமிசத்தை சிறு சிறு பாகமாக்கி
ஒரு பையில் வைத்து அங்கேயே பகிர்ந்து
கொண்டதாய் செய்தி....................... படத்துடன்.....
பசுவதை , அதை தடுத்தல் ஒரு புறம் இருக்க
இளங் கன்றை வெட்டி மாமிசத்தை பகிர்ந்தது
என்னை ஏதோ செய்தது ........................
மனிதாபிமானம் எங்கு போனது.................இப்படி
கோபத்தில் நாம் இப்படி நடந்துகொள்வது.........
சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஐயா.......என்
பசுவின் சிசுவும், மனிதன் சிசுவும் ஒன்றுதான்
அடித்து கொள்வது கொலைதான்.............என் சிற்றறிவு
சொல்லுது ஐயா

ராமு : செரியா சொன்ன டா சோமு,,,,,,,,,,,,,,,,
கோபம் மனிதனை மிருகமாக்கிவிடுதல்
தெளிவாகிறது ...........................
எதிர்ப்பு தவறில்லை , அதை சிந்தித்து
வன்மை, வன்மம் இல்லாமல் செய்தல் வேண்டும்
சோமு : வள்ளுவரை தெய்வப்புலவர் என்றும் குறளை
வேதம் என்றும் கூறி என்ன பயன் .....................
அவர் வாக்கை நாம் படித்தோமா என்றே
எனக்கு தோணுது ஐயா

ராமு : ரொம்ப செரியா சொன்ன ..............



,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-17, 4:04 pm)
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே