காதல் வலிகள்

கட்டிடத்தில் விரிவு ஏற்பட்டால்
நிபுணரை கொண்டு தீர்வு கண்டு
சரி செய்வது சாத்தியம் -ஆனால்
காதல் என்னும் கட்டிடத்தில்
விரிவு வருமாயின் அந்த விரிவை
சரிசெய்ய ஒரு போதும் நடவாது
பிரிவே அதற்கு மருந்து -பிரிவு
தரும் வலிகள் காதல் வலிகள்
உடலில் உயிர் உள்ளவரை
உள்ளதை விட்டு மறைவதில்லை
அந்த வலிகளில் மறைந்திருக்கும்
காதல் தந்த இனிய நினைவுகள்
வலிகளை மறைக்கும் குறைக்கும்
"வலி நிவாரண மாத்திரைகள்"

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-17, 8:45 pm)
Tanglish : kaadhal valikal
பார்வை : 227

மேலே