என் நூலகத்தில் நீ

நீ இருக்கும் நேரத்தில்
உனக்கென்று ஓர் வரி இல்லை என்னிடம்.,
நீயே ஒரு கவிதை
உன்னை படிக்கும் நேசனாய்
தினம் உன்னை தவழ்ந்தேன்.,
முகம் பார்த்து பேசிய இருவிழி
ஏனோ
முகம் காட்ட மறுக்கும்
வழி வந்த பறவை
தடுமாறி போனதோ.,
உயிரென பேசி
உருகிய காலம்போய்
தனிமையிலே பேசும்.,
என் இதய நூலகத்தில்
நீயே புத்தகம்
நான் படிக்கும் கவிதை
நீ பேசிய வார்த்தை அல்லவா
காற்றடித்து பறந்ததோ
உன் கவியில் என் பக்கங்கள்.,
முகவரி தொலைத்தேன்
ஏனோ
உன்னிடம் பேச கிருக்கினேன்
கவிதையென்று பெயர்வைத்தார்
என் எழுத்து தொடக்கம் நீ
என் முடிவும் நீ
என் நூலகத்தில்
என்றும் பேசும்
உன் கவியே ...

- ப.கார்த்திகேயன்
#காதல் #love #கவிதை

எழுதியவர் : (3-Jun-17, 8:05 pm)
பார்வை : 83

மேலே