நினைத்தேன்
நினைத்தேன் வந்தாய்
நினைவுகளை
தந்துவிட்டு
நீமட்டும்
எங்கே போனாய்?
உன் சிரிப்பில்
உலகம்
மறந்தேன்.....
இன்று என்
சிரிப்பை நானே
சிறைப்படுத்திக்கொண்டேன்
உன்னை
இழந்து......!!
மருந்திட்டு
மாற்றும்
காயங்களை
நீ
தரவில்லை.....
உன்னைத்
சேராமல்
ஆறாதடி
அன்பே.....!!
விழிக்குள்
விளையாடிக்
போனவளே.....
என்னைக்
குழிக்குள்
வீழ்த்திப்போனதேனடி.....??
ஏழேழு
ஜென்மம்
உன்கூட
நான்
வாழும்.....யோகங்கள்
எனக்கு
வேண்டும்.....
நீ
வெறுத்தாலும்
விரும்பினாலும்.....!!
சோலைக்குயில்
ஓன்று
சோகம்
பாடுது.....
சொல்லமுடியாத
தனிமையில்
நின்று.....!!
உன்
எண்ணத்தில்
நான்
வாழ்கிறேன்....
வண்ண வண்ணக்
கனவுகள்
வந்து
என்னை
உன்னைக்காண்பித்துப்
போனது......!!
என்
வாழ்வின்
நீளங்கள்.....
உன் கரங்கள்
பிடித்தே
இன்னும்
கொஞ்சம்
போகட்டும்.....!!
உன்னோடு
வாழும்
எண்ணங்கள்
மட்டுமே
என்னோடு
வாழும்......!!
ஓடும்
மேகங்கள்
போடும்
கோலங்கள்
போல.....
ஒவ்வொரு நிமிஷ
வாழ்வும்
உன்நினைவுகளோடு
கலந்தே
கிடக்கிறது......!!