ஏழு எண்---- 7---

கம்பனுக்கும் மிகப் பிடித்த எண் ஏழுதான்! நிறைய இடங்களில் ஏழை வைத்து பாடல்களில் விளையாடுகிறான். கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் சில பாடல்களை மட்டும் இங்கு தத்ருவன்:-



ஏழு மாமரம் உருவி கீழுஅலகம் என்று இஅசைக்கும்

ஏழும் ஊடுபுக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையான மீண்டது அவ் இராகவன் பகழி

ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்றும் இன்னும்



ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி

ஏழு மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப

ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம் என்று எண்ணி

–மராமரப் படலம், கம்ப ராமாயணம்



பொருள்:

அவ்வாறு தொடுக்கப்பட்ட ராமபிரானின் அம்பு ஏழு மரங்கலைளையும் துளைத்து, கீழேயுள்ள 7 உலகங்களையும் துளைத்து, இதற்கும் கீழே ஏழு என்ற எண் ஏதும் இல்லாமையால் இராமனிடமே திரும்பி வந்தது. இனி எங்காவது 7 என்ற எண்ணைப் பார்த்தால் துளைத்துவிடும்!





(இராமன் அம்பு, கிருஷ்ணனின் சுதர்சன சக்கரம் ஆகியன எல்லாம் பூமராங் போலத் திரும்பிவரும் கோணத்தில் விஞ்ஞான முரைறைப்படி அமைக்கப்பட்டவை)



ஏழு கடல்களும், மேலுலகங்கள் ஏழும், 7 மலைகளும், 7 முனிவர்களும் (சப்த ரிஷி), சூரியனின் 7 தேர்க்குதிரைகளும், சப்த மாதர் என்பபடும் 7 கன்னியரும், அஞ்சி நடுங்கினர். நம்முடைய பெயரிலும் 7 என்ற எண் இருக்கிறதே என்று பயந்தனராம்.



ஆயினும் இராமபிரான் “அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன்” என்னும் நம்பிக்கையில் பேசாமல் அமைதி காத்தனர் என்கிறான் கம்பன்.



ஆக்கியோன் சுவாமிநாதன்

எழுதியவர் : (6-Jun-17, 2:46 am)
பார்வை : 40

மேலே