இறைவனிடம் கையேந்தினேன்

இறைவனிடம் கையேந்தினேன்
நல் ஆரோக்கியமும் பெருத்த செல்வமும் வேண்டுமென்று
இறைவன் சொன்னான்
நீ மண்ணில் பிறக்கும் போதே
இதை உனக்கு அருளினேன் என்று...

இறைவனே பொய்
உறைக்கிறானே என நினைத்து
எனக்கு என்ன எப்போது
எதை கொடுத்தாய் என்று
மீண்டும் இறைவனிடம் கேட்டேன்..

இறைவன் சொன்னான்
ஐம்புலன்களிலும்
குறைவில்லா அற்புத
மனித பிறப்பை கொடுத்துள்ளேன்
தேஜஸ் நிறைந்த முகமும்
நீண்ட ஆயுளையும் கொடுத்துள்ளேன்
இதை வைத்து உனக்கு
வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொள் என்றான்...

ஆம் புரிந்தது
உண்மை தெரிந்தது
மன தெளிவுபெற்று
உழைத்தேன் என் வாழ்வில் வளம்பெற...

எழுதியவர் : செல்வமுத்து.M (6-Jun-17, 9:29 am)
பார்வை : 346

மேலே