பசுக்கொரு நியாயம் உனக்கொரு நியாயமா மனிதா- பசு கேட்டால்

கறந்து நமது வீடுகளுக்கு செல்வம் தரும்போது
மாடு கறவை மாடு , முதுமையில் கறக்கவில்லை
பாவம் மாடுகள் வேண்டாத பலி மாடுகள் !
பணியில் இருக்கும்போது மனிதன் சம்பளம் வாங்குகிறான்
முதுமையில் பணியில் ஓய்வு பெரும் மனிதனுக்கு
ஓய்வு ஊதியம்
பாவம் வாயில்லா பசு மாடு அதற்கு நியாயம் வழங்குபவன்
மனிதன் .....................
நீதியில் நியாயம் இல்லையே
நீதி தேவதை தூங்கிகிறாளோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jun-17, 5:16 pm)
பார்வை : 87

மேலே