மருத்துவ செலவு

மருத்துவ செலவிற்காக..
மண்டியிட்டு நிற்கின்றேன்..
மனிதத் தன்மையற்றவனின் முன்..
மனிதாபத்தை எதிர்பார்த்து...

மருத்துமனைகளின் தொழில் தர்மம்
கொல்லைப்புறத்தை நோக்கி...
மருந்துகளின் விலையோ வானத்தை நோக்கி...

நயாபைசவிற்கும்..
நியாயம் பேசுகின்றார்கள்..
நாயிக்கு போடும் புரை கூட
நாற்பது ரூபாய்...

கர்மா என்பான்..
தருமத்தை தெரியாத
கருமம் பிடித்தவன்...


நாடி பார்க்கும் முன்னே..
நாற்பதாயிரம் கட்டு..

நாரிப்போனால்..
நாலணாவும் மிஞ்சாது..
நடுத்தெருவில் தான்...

முட்டிச் செத்தாலும் நோய்...
முக்கினாலும் நோய்...
முனங்கினாலும் ஒரு நோய்...
முன்னூறு பாகங்களுக்கு
மூவாயிரம் நோய்கள்...

பயத்தை விதைத்து..
பணத்தை அறுவடை செய்கிறார்கள்...

மூன்று வேளை சாப்பாடும்..
மாத்திரை வடிவுகளில்...

பழைய பழங்கஞ்சியை தின்ற..
பல்லுப்போன தாத்தாவும்..
பாறை போன்று இருக்கின்றார்...

பதினாறு தானியத்தோடு..
பர்கரும் பீசாவும் தின்றவன்..
பானை வயிற்றோடு..
பாழ்பட்டுக் கிடக்கின்றான்...

****************
சிகுவரா
15-03-2017

எழுதியவர் : சிகுவரா (8-Jun-17, 11:12 pm)
சேர்த்தது : சிகுவரா
Tanglish : marutthuva selavu
பார்வை : 155

மேலே