துரோகியாகி
நண்பன் தான் என நம்பி
கூறிய வார்த்தைகள் தான்
இங்கே நயவஞ்சமாக
பயன்படுத்த படுகின்றன .
நல்லவன் என நம்பி
அனுப்பிய போட்டோக்கள்
அவளை நசுக்க காரணமாகிறது .
உறவுக்காரன் என்றே
உசுப்பி விட்டு
ஊரை விட்டு அனுப்ப ஏதுவாகிறது
எங்கே செல்வேன்
இந்த துரோகிகளுக்கு மத்தியில் ..
அன்பை கொடுத்து
வாழ்க்கையை கெடுக்கும்
காதலிலும் துரோகம்
நட்பை அறுத்து
வாழ்க்கையை வெறுக்க வைக்கும்
குடும்பத்திலும் விரோதம்
இறைவா வழி சொல்
வாழ அல்ல ...மரணிக்க