தொடரும்

பேருந்தின்
11வது எண் இருக்கை
பேச எதுவுமற்று
வெறித்த மௌனத்துடன்
பயணம்

கடந்து போன
நாட்களின்
நினைவுகள்
அசைபோட
பெருமூச்சுகள்

விடாது அடிக்கும்
கைப்பேசிகளின்
கூக்குரல்கள்

இளம் தம்பதிகளின்
கை கோர்த்த
குசுகுசு பேச்சுகள்

வியர்வைகளை
உலர்த்தும்
ஜன்னல் காற்று

திரைக் காட்சிகளாய்
மறையும்
ஊர்

ஊர் போனபின்
பேசு
என்பதற்கு
மனதில் முனையும்
தேக்கங்கள்

கண் மூடினால்
கடைசி வார்த்தைகளும்
கண்கள் தவிர்த்த
கணங்களும்
பிம்பங்களாய்
நகர்கின்றன

சில நாட்கள்
சந்திப்பின்
நினைவுகள்
பிரிதலின்
வலிகளை
அடையாளப்
படுத்துகின்றன

இருத்தலின்
இறுக்கங்கள்
சோர்வாக
தலை சாய்ந்து
கண் மூடி
பயணம்

மீண்டும்
தொடரும்….

எழுதியவர் : மு. கிருஷ்ணகுமார் (9-Jun-17, 2:45 pm)
சேர்த்தது : kanchi krishnakumar
Tanglish : thodarum
பார்வை : 191

மேலே