இதுக்கு மேல என்னத்த சொல்றதடி
உன் விழி என்ன வேலா ! உன் பார்வை என்னை
தினம் குத்தி குத்தி கொல்லுதடி !
உன் இதழ் வண்ணம் என்ன
செம்பருத்தி பூவா ! செந்தாமரையா !
சித்திரமே நீ சொல்லடி !
நித்திரையே இல்லையடி -திங்கள்
உன் முகம் பார்த்தே நாளெல்லாம் செல்லுதடி !
காற்று வந்து உன் குழல் தீண்டி பறக்குதடி -என்
கவிதைக்கும் கை கால் முளைத்து உன்னை தழுவ
காத்து கிடக்குதடி !
கம்பனை போல கவிதை எழுத தோணுதடி !
கட்டழகி உன்னைப்பார்த்து பார்த்தே என் மனமெல்லாம் நோகுதடி !
உள்ளத்து நினைவெல்லாம் நீ மட்டும் தானடி !
உனக்கு உரிமையானவன் நான் மட்டும் தானடி !
ரத்தினமே ,சித்திரமே என் ரகசிய கவிதை புத்தகமே
ரம்பையும் ஊர்வசியும் உன் அழகுக்கு தோற்றுத்தான் போவாளடி !
கண் அசந்து தூங்கையில கனவுல வந்து கொல்லுறியேடி
அழகுக்கு உன்ன மட்டும்தான் உவமையா சொல்ல தோணுதடி !