மழையே மழையே
கோபம்கொண்ட
கதிரவன்
ஏற்றுக்கொண்ட
நிலம்
ஆறாத பசி
அழிகின்ற விவசாயம்
வற்றிய கிணறும்,
ஆறும்
காட்சி பொருளாகுமோ
விவசாயம்
உயிர்விட்ட
உழவன்
கொள்ளைகொண்டு
போகிறது
மரங்கள்
சாபம் கொண்ட
மனை
தாங்கிக்கொள்ளாத
கண்ணீர்
வருமோ
மழையே!
மழையே!
மழையே!
ஆக்கம் - ராஜூ