உன் வெட்கம் நியாபகம்

உன் நினைவாக ஒரு
ரோஜாவை வளர்க்கிறேன்
அதன் இதழை பார்க்கும் போதெல்லாம்
உன் மென்மை நியாபகம்
அதன் முள்ளை தொடும்போதெல்லாம்
உன் கோபம் நியாபகம்
அதன் அரும்பை பார்க்கும்போதெல்லாம்
உன் மௌனம் நியாபகம்
அது தென்றலில் சாய்ந்து ஆடும்போதெல்லாம்
உன் வெட்கம் நியாபகம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (9-Jun-17, 6:02 pm)
பார்வை : 142

மேலே