மழை நீ
மழை நீ!
மழை…
உன்னை எனக்கு அடிக்கடி
நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
தூறல் - உன்
அனுமதி கோறல்.
சாரல் -உன்
சள சளப் பேச்சு.
அடைமழை -உன்
ஆர்ப்பரிப்பு.
மழைவாசம்…
உன் வாசம்.
சில்லென்ற ஈரக்காற்று…
என் காதோரத்து உன் சுவாசக்காற்று.
இன்று நீ ஆவியாகி
மேகங்களினூடே மறைந்துபோனாய்.
என் நேசக்காற்றுபட்டு
மீண்டும் என்னையே சேர்வாய்
என்ற ஏக்கத்தில் நான்.