என் காதலின் வலிகள் - சகி

காதலே ....

நம் காதலில்
முழுமையாக தொலைந்துப்போனதோ
உன் அன்பு ......

கொஞ்சல்கள் எல்லாம்
மாறி வெறுப்பு குடிக்கொண்டதோ இன்று ....

உன் காதலில்
நான் அநாவசியமாக
தோன்றுகின்றானோ இப்போதலாம் .....

என்னிடம் எதையும்
பகிர உன்மனம் இடம்கொடுப்பதில்லை ....

உன்வார்த்தைகள் எனக்கு
உணர்த்துகிறது ......

உன்னில் நானில்லை
என்பதை .......

உன் ஆறுதல்கள்
இன்று என்னிலில்லை.....

உன் காதல்
என்மேலில்லை .....

உன் வார்த்தைகளில்
பாசமில்லை .....

நாம் என்ற உணர்வு
உன்னிதயத்திலில்லை .....

வலிகளுடனே
என்னிதயம் துடிக்கிறது ....

மரணம் வரை
இவைகள் தொடருமாயின்
வெகுதொலைவில் என்னிதயம்
துடிப்பதை நிறுத்திவிடும்
என்பதை மட்டும் மறவாதே .....

என் அன்புக்காதலா ....

எழுதியவர் : சகி (10-Jun-17, 7:51 pm)
பார்வை : 1184

மேலே