எந்தன் வலிகள் - சகி

நான் நானாகவே
இருப்பதில் தானோ
ஏனோ அளவற்ற
துன்பங்களை அனுபவித்து
வருகிறேன் .....
ஒருசிலரைப்போல்
பொய்யான அன்புடன்
பழகினால் மகிழ்ச்சியாக
வாழமுடியுமா என்னவோ
அறியவில்லை ......
ஏமாற்றங்களை சந்திக்கும்
தருணங்களில் தான்
என் மனம் மரணத்தை
தேடுகிறது....
மரணமே என்னை
அழைத்துசெல்.....
இந்நொடியே.....