இம் முறையும் பறவையாகிறேன் நான்
நீ கிறுக்கும் வானத்தில்
இம் முறையும்
பறவையாகிறேன் நான்....
*****
கடைசி ஆணியை அடிக்கையிலாவது
ஒரு கல் கூட்டத்திலிருந்து
வந்திருக்கலாம்.....
*****
வீதி நிறைக்கும் என்னை
வழியெங்கும் சிந்துகிறது
பிணமான பூக்கள்...
*****
ஜடாமுடியில் வீதி சுற்றுபவன்
தலைக்குள்ளிருந்து கொட்டுகிறது
பைத்தியகார புழுக்கள்
*****
எதிர் எதிரே கடக்கையில்
நாமாகி விடுதலில் இருக்கிறது
கொஞ்சம் காதலும் கொஞ்சம் சாதலும்...
*****
யார் என்று கேட்டார்கள்
யாரோ என்றும் சொன்னார்கள்
வீடு வரை யாராவாக இருப்பதும் பிடிக்கிறது
*****
தவித்த வாய்க்கு நீர் இல்லவே
இல்லை எனும் வீடுகளை
வழிகளில் காண்கிறேன்
நா வறலும் முன்
மனம் வறண்டு விடுகிறது....
*****
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
