ராசியானவள்
முப்போகம் விளையனுமா முதல் விதை அவள் இடட்டும்
தன்னை விதைத்தவளின் முகம் காணவே மண்ணைத் தாண்டி
பயிர் தலை நீட்டும்
அவள் பாதம் பட்ட இடமெல்லாம்
பச்சையம் கூடிவிடும்
அவள் கை பட்ட உயிரை காத்திடவே
காற்றும் உரமாகும் பூச்சிகள் விரதம் இருக்கும்
அவள் விழிகள் வானம் பார்க்க
மேகம் கறைந்து மழை மண்ணைச்சேரும்
அவள் கரங்களால் அறுபட்டு அகிலத்தின் பசி தீர்க்க
பயிர்கள் தலை சாய்த்து அறுவடைக்கு காத்திருக்கும்
எந்த ராசியில் பிறந்தவளோ
அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்