ஹைக்கூ லிமரைக்கூ
அடுத்த வீட்டில் படராமல்
கிளைகளை நறுக்கினேன்.
வேலிக்கு வெளியே வேர்.
*************************************
போனவருசம் வைச்சாங்க பாக்கு
அதுக்குள்ளே வெட்டுறாங்க புள்ள
பொறந்த நாளைக்கு கேக்கு.
மேச்சலுக்குப் போயிருந்த மாடு
விலைபோனது அறியாமல்
தேடி வருகிறது வீடு.
********************************
பெண் பிடித்திருந்தது
சம்மதம் சொல்லிவிட்டாள்
வீட்டுக்கு புதிய வேலைக்காரி
********************************************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
