சாதாரணமானவனின் தமிழ் ----படித்தது

இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன்.
பலர் என்னையும் கடந்து போகிறார்கள்.
சிலர் கை காட்டிப் பேசிப் போகிறார்கள்,
சிலர் தட்டித் தருகிறார்கள்,
சிலர் வழியமைத்துத் தந்து வாழ் என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

தமிழ் எனக்கு

வாழ்வு தந்த
வலிகளைக் கடக்கவும், மறக்கவும்
தனிமையைக் கொல்லவும், வெல்லவும்
துயர் பகிரவும்
நட்டைப் பெறவும், தொலைக்கவும்
சுயவிமர்சனத்துக்கும்

தவிர

என்னை மனிதனாயும், மிருகமாயும்
சிலருக்குக் காட்டவும்
முக்கியமாய்

என்னை நானே அறியவும்
பேருதவி புரிந்திருக்கிறது

வாழ்க தமிழ்!
...........................

இறுதியாய்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

மேற் கூறியதற்கும், கீழுள்ள நோர்வே கவிஞர் கவிதாவின் கவிதை வரிகளுக்கும் தொடர்பிருக்கிறது போலிருக்கிறது எனக்கு.. உங்களுக்குமா?

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

புரிந்ததா நட்பே?

எழுதியவர் : (17-Jun-17, 5:53 am)
பார்வை : 66

மேலே