அப்பா - ஆன்ஸ் ராஜ்

அப்பா என்ற வார்த்தைக்குள் என் அனைத்தும் அடக்கம்.

காலங்கள் கடந்தும் எனக்கான அவர் அன்பை இது வரை பங்கிட்டதில்லை யாருக்கும்.
நான் கண்டு வியந்த நாட்கள் பல.

என் மகளென்று மார்தட்டிக்கொள்ளும் என் அப்பா அதை என்னிடம் காட்டிக்கொண்டதே இல்லை.

என் உயர்வைக்கண்டு பெருமிதமாய்ப் பேசியவருக்கு உருப்படியாய் நான் ஒன்றும் செய்ததில்லை.

கைப்பிடித்து நடைபழக்கிய நாட்கள் முடிந்தன என நினைத்த நேரத்தில் என் கால்கள் வலிக்குமென்று இன்றும் என்னைத் தூக்கிக் கொண்டு பயணிக்கிறார் என் கடினமான பாதைகளில்.

திரும்பிப் பார்க்கிறேன் என் பின் அவர் இல்லை எனக்கு முன் நடந்து என் வழியை எளிதாக்கிக் கொண்டிருக்கிறார்.

விட்டுக்கொடு, கொடுத்து மகிழ்ந்திரு, அமைதியாய் இரு, பொறுமையாய் இரு இன்னும் அப்படி இரு இப்படி இரு என்று ஒரு நாளும் சொன்னதில்லை,அவர் வாழ்ந்து இப்படி வாழ என்னைப் பழக்கியிருக்கிறார்.

உண்மையில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என் தந்தை அன்பின் முன்னே.

என்றும் அன்புடன் என் அப்பாவின் மகள் 😘

எழுதியவர் : பபியோலா (18-Jun-17, 10:29 am)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 572

மேலே