வெளிநாட்டு கணவன்

நின்ற வாகனம் முழுமைபெறவில்லை சட்டென இறங்கிய என் கால்கள், எதையோ தேடிய கண்கள், படபடக்கும் இதயத்துடன் முன்னேறுகிறேன்.
வாடிக்கையான உறவினர் விசாரிப்பு, பின்பு அம்மாவின் பேச்சு அரைநிமிடம் கூட நீளவில்லை எங்கே அவள் என கேட்க, நீட்டிய விரலின் நுனியில்,
என் கண்கள் தேடியே, உன் கடைவிழி மட்டும் காண்கிறேன்,என் நாளம் துடிக்க ரத்தம் கொதிக்கின்றது, ஒரு தாயை தேடிய குழந்தை போல நீ கேட்கும் நலம் விசாரிப்பின் போது.
கண்ணில் நீர் கசிய உலை கொதிக்கும் பானையின் மூடியைபோல உன் உதடு தட தடக்க, நம் பிரிவுக்கு விடை கொடுத்து, காற்றுக்கு தடைவிதித்து உனை கட்டி அனைபேனடி என் உயிர் தோழியே!!!!!!!.

எழுதியவர் : அபு சித்திக் (18-Jun-17, 11:09 am)
சேர்த்தது : அபு சித்திக்
Tanglish : velinaattu kanavan
பார்வை : 1008

மேலே