உன்னோடு நான்
உன்னோடு
கைகோர்த்து நடக்கமுடியவில்லை..
உன் நிழலோடு நடக்கிறேன்...
உன்னோடு
மணிக்கணக்கில்
கதைப்பேச ஆசை
நீ மௌனமாய்
பார்க்கும் ஒருபார்வையில்
துவழ்கிறேன்...
தெருவோர
நாய் மீது காட்டும்
கரிசனம்கூட எனக்கில்லை...
இருந்தும் உன்னை
வெறுக்கமுடியவில்லை..
நீ கோபம் கக்க
உமிழ்ந்த சொற்களைக்கூட
ரசித்துக்
கொண்டிருக்கிறேன்...
இன்று என்னவள் என்னோடு பேசுகிறாளென்று....