காதல்
கண்களிரண்டில் தீபங்கள்
ஏற்றி வந்தாள்- என்
இருண்ட உள்ளத்திற்கு
ஒளி தந்தாள்
வழிகாட்டியாக; அவள்தான்
என் காதலி- நாளை
என் வதுவை, மணமகனாக
என்னை ஏற்று என் வாழ்வை
மலரவைப்பாள் -தந்திகள்
அருந்த வீணைக்கு
புதிய தந்திகள் ஏற்றி
சுருதி கூட்டி இசை
ஒலி பெருக்கும் ஒரு
அற்புத இசை மேதைபோல்
என்னவள் என் காதலி ! ,