இயற்கையின் பிரசவம்

மரங்களின் விதைகளை
ஒரு நாள் கருவாக வயிற்றில் சுமந்தக் குருவிகள் எச்சமாக பிரசவித்தன!
தென்றல் அவற்றை வாரி அணைத்துக்கொண்டது மென்மையான தாய்மையாக மாறி
மண் வயிற்றில்!
மழைத்துளிகள் உதிரமாகி
சூரியத் தந்தையின் கண் பார்வையில் பிறந்தவுடன்!
தன் இலைகள் கைகளாக மாறி தன்னை பெற்றெடுத்த அனைத்து அன்னைக்கும் நன்றி சொன்னது!
ர ஸ்ரீராம் ரவிக்குமார்.