வேண்டுதல்
இடி இல்லா மழை வேண்டும்
குடி நீருக்கும் வாசம் வேண்டும்
மாதம் 30 பௌர்ணமி வேண்டும்
மலை மேகம் நான்தொட வேண்டும்
பலவண்ணத்தில் தென்றல் வேண்டும்
பகல் தூங்கா நட்சத்திரம் வேண்டும்
கற்கண்டு போல் கடல்நீர் வேண்டும்
நீரும் நெருப்பும் நட்பாள வேண்டும்
ஆற்று நீரும் அலை கொள்ள வேண்டும்
காதல் உலகை ஆள ஒருவன் வேண்டும்
அவன்
இவ்வேண்டுதல்களை விரும்பி கேட்க வேண்டும் !!!