ஹைக்கூ - 03
நான் அழுது முடித்த பின்
ஆறுதலாய் வருகிறது
ஒரு கவிதை..!
இனிக்கும் இன்னிசை
முகம் சுளிக்க வைக்கிறது
இரைச்சல்..!
இசைக்கும் இரைச்சலுக்கும்
பாட்டுப்போட்டி அரங்கேறுகிறது
நெடுஞ்சாலை..!
மலர்ந்திருக்கும் மலர்கள்
வாடிக்கிடக்கிறது மனம்
முதிர்கன்னி..!
வெற்றி வர வழியில்லை
ஆக்கிரமித்திருக்கிறது
பொறாமை..!