appa
வார்த்தைகள் சொல்ல அளவில்லை
என்னை வடிவமைத்தவர் பற்றி
வாழ்க்கையை வாழவேண்டும்
என்னை வடிவமைத்தவருக்காக
வாசகம் சொல்ல தேவை இல்லை
வாழ்க்கையை கற்றுத்தருபவருக்கு
கடைசிவரை வாழ்கிறார்
என்னை கரை சேர்க்க
கை,கால் ஒய்கிறது
கண் பார்வை போகிறது
நரம்பு தளர்கிறது
நளினம் குறைகிறது
நடை பயணம் நகரவில்லை
என்னை காத்த உனக்கு
என்ன தந்தாலும்
வியாபாரம் போல மாறிவிடும்
உன் உறவு என் உயிர் உள்ளவரை
என்னுடனே ..................