அழகில்லை முகத்தில்

தோற்றத்தால் கொண்ட அழகை விட - சிறந்தது
உள்ளத்தால் கொண்ட அழகு!

அழகீனம் கொண்ட பெண்ணையும் அழகாக்கும் - திரும்ப
திரும்ப பேசி பழகுவதால்!

அழகான பெண்ணென்று ஒருவள் இல்லை - புறத்தால்
அகத்தால் கொண்டதே அழகு!

புறத்தால் கொண்ட அழகு மாறிடும் - மாறாதே
அகத்தால் கொண்ட அழகு!

- மன்சூர்

எழுதியவர் : மன்சூர் (21-Jun-17, 11:59 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : azkillai MUGATHIL
பார்வை : 424

மேலே