காதலும் கடந்து போகும்

காலம் காலமாக காதல் என்றாலே அனைவரின் மனதிலும் ஓர் புத்துணர்ச்சிதான் இந்த காதல் கதையும் அவ்வாறே ஆனால் வித்தியாசமானது,

அன்று அதிகாலை நாளிதழில்,

காதலி மீது திராவகம் வீசி, காதலன் வெறி செயல், தன்னை காதலிக்க மறுத்ததால் பெண்ணின் மீது திராவகம் வீசியதால் இளைஞன் கைது. இப்படி செய்திகளை படித்துக் கொண்டு இருந்தான் சூர்யா, உடனே விரைந்து கிளம்பினான். கடை தெருவிற்கு, போகின்ற வழியில் தான் கொண்டிருந்த காதலை எண்ணிக் கொண்டே சென்றான்.

சில வருடத்திற்கு முன்,

சூர்யாவை தாக்கியது அந்த காதல், அழகுக்கு இலக்கணம் , அகராதி எல்லாம் அவள் மட்டுமாய் அவன் முன் அவள் பெயர் தாரணி. அழகின் நந்த வனம்
அவளை பார்த்த நொடியில் காதலில் விழுந்தான். அன்று முதல் தன் வேலை மறந்து தன் ஒரே வேலையாக அவளை பின் தொடர்ந்தான். அவளின் கன்னக்குழி அழகில் அவன் மயங்கினான், அவளின் பேச்சின் இனிமை குயில்கள் கூட்டம் இசைக்கின்ற இனிய கச்சேரியாய் அவன் காதில். இப்படியா மாதங்கள் கழிய ஒரு நாள் அவளிடம் தன் காதலை கூறினான். தாரணி, திகைத்தவளாய் மறுமொழி கூறாமல் சென்றால், பதில் தெரியாமல் இவனும் பின்தொடர்ந்தான். இப்படியே நாட்கள் கழிய ஒரு நாள் இவன் காதலை தாரணி ஏற்றால். எல்லா காதலர்களை போல் இவர்களும் தங்கள் காதலை வளர்த்தனர்.

இவளை காயப்படுத்த மாட்டேன் என்று அவனும், இவன் மனம் கோணாமல் தான் நடப்பேன் என்று அவளும் தங்கள் காதல் வார்த்தைகளை பரிமாறி கொண்டனர். வருங்காலம் எப்படி அமைய வேண்டும் என்றெல்லாம் கற்பனை கடலில் மிதந்தனர். பார்ப்பவை எல்லாம் அழகாய் இவர்கள் முன். சிறு சிறு சண்டை சிறு சிறு கோபம் மறப்பதும் மன்னிப்பதும் இப்படியே வருடம் உருண்டது . இப்படி வசந்தத்தில் புயல் வந்தது,

தாரணி வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது, இந்த வேலையில் தன் காதலை பெற்றோர் இடம் அவள் கூற வேண்டிய கட்டாயம் தன் காதலை மனதில் தைரியம் வர வளைத்து கூறினால் அவள் பெற்றோடிடம், அவர்கள் திகைத்து, மறுத்தனர் தங்கள் ஊரில் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறோம், நீ இப்படி செய்தால் நங்கள் தலை குனிந்து சாக வேண்டியது தான் என அவள் காதலுக்கு மறுத்தனர், அவள் அவர்களிடம் எவ்வளவோ போராடியும் அவள் தந்தை கவுரவத்தை விட முடியாது என்று சொல்லி சாக போகிறேன் என்று மிரட்டினார். இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுது ஆரவாரம் செய்தும் பயன் இல்லாமல் போனது. அதனால் அவளின் பெற்றோர் விருப்பத்திற்கு சம்மதித்தாள். அவர்கள் ஒரு மாப்பிளை பார்த்து தாரணி சம்மதம் இன்றி பேசி முடித்தனர்.

இந்த செய்தி கேட்டதில் இருந்து சூர்யா, பிரமை பிடித்தவன் போல் ஆனான். அழுது அழுது அவன் கண்ணே சிவந்தது. மறுநாள் தாரணி வீடு சென்று அவளை பார்த்து தன்னுடன் அழைத்து வர சென்றான். அவள் தந்தை ஆள்களை வைத்து அடிக்க செய்தார் ஆனாலும் அவன் நகர வில்லை. பிறகு தாரணி தந்தை அவளை வைத்தே அவனை தகாத வார்த்தை பேச சொல்லி விரட்டினர். இதனால் தாரணி மேல் சூர்யாவிற்கு கோபம் ஏற்படுத்து, தன்னை ஏமாற்றி விட்டாள் என்று புலம்பினான்.

அவன் நண்பர்கள் அவனை ஆறுதல் செய்தும் ஏற்க மறுத்து பெட்டியில் அடைபட்ட பாம்பு போல் வீட்டுக்குள்ளே இருந்தான். அன்று காலை தான் வெளி வந்து நாளிதழ் வாசித்தான் அதில் திராவகம் பற்றிய செய்தி அவனை பாதிக்கவே அவனும் அச்செயலையே தானும் செய்ய துணிந்தவனாய் கடை வீதி சென்றான். போகும் முன் தரணியிடம் உன்னை சந்திக்க வேண்டும் நீ நாம் வழக்கமாய் சந்திக்கும் இடத்திற்கு வா என்று அழைப்பு விடுத்து தொலைபேசியை துண்டித்தான்.

இப்படியே அவன் பழைய நினைவுகளை நினைத்தவனாய் சென்று கொண்டிருந்தான். போகின்ற வழியில் எதோ ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்தது, தான் தரணியை உண்மையாகத்தான் நேசித்தோம். பின் ஏன் இந்த ஒரு நிமிடத்தில் அவளை காய படுத்த துணிந்தோம் என்று எண்ணினான். தன்னை தாரணி எவ்வளவு மாற்றம் செய்தால், தன் முரட்டு குணம் மாற்றி அன்பானவன் ஆக்கினாள். தனக்காக எவ்வளவோ செய்தால் அவளை இந்த ஒரு நிமிட கோபத்தில் வாழ்வை நாசமாக்க துணிந்தது ஏன் என்று நினைத்தான்.
ஏன் இந்த உலகில் ஆண்களை போல் பெண்ணுக்கும் மனம் என்று நினைக்க தவறினோம் என்று தனக்குள்ளே கேட்டு கொண்டான். ஏன் இந்த உலகில் பெண்கள் மட்டும் தான் காதலித்து ஏமாற்றுகிறார்கள், ஆண்களும் தான் அவ்வாறு செய்கிறார்களே? என்று பலவாறு கேள்வி கேட்டு கொண்டான். அவள் கொடுத்த அன்பு மனம் அதை நான் ஏன் சாகடிக்க நினைத்தேன், அவள் காதல் சொல்லிய நல்ல வழியை ஏன் நான் தவற விட பார்த்தேன். அவளுக்கும் மனம் என்று இருக்கும் அதில் காதல் ஏமாற்றம் அடைந்து தானே இருக்கும், ஆண்கள் பழி வாங்க துடிப்பது போல் ஏன் பெண்கள் செய்வது இல்லை, அப்படி அவர்கள் பழி வாங்க நினைத்தால் இங்கே பாதிக்கு மேல் ஆண்கள் இருப்பது இல்லை. தாரணி மனம் புரியாத நான் எப்படி அவளை உண்மையாக நேசித்திருப்பேன் என்று பலவாறு கேட்டுக்கொண்டு வீடு நோக்கி பயணித்தான்.

தாரணி சந்திக்க அவன் சென்றான், அவள் ஒன்றும் பேசாமல் தான் இவனை ஏமாத்திடோமே என்று மனதிற்குள் புலம்பினாள். சூர்யாவோ! தாரணி, நீ வாழ்வில் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும், காலம் நம் காதலை மறக்க செய்யும், நாளை உனக்கு உதவி தேவை என்றால் என்னிடம் தயங்காமல் கேள். நான் உன் மேல் கோபம் கொள்ள வில்லை. நீ நன்றாக வாழ வேண்டும் அதுவே என் ஆசை என்று சொல்லி வருகிறேன் என்று பெருமிதத்துடன் கிளம்பினான். காதல் காவியம் படைத்த அவன் செல்லும் வழியை பார்த்து தாரணி கண்ணீர் விட்டாள்.

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (22-Jun-17, 7:58 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 693

மேலே