வேலி தாண்டிய காற்று

பிரித்து பிரித்து வேலியிட்டு
பாகப் பிரிவினை ஒன்று நடந்தேறியது
ஆழமாக குழுதோண்டி கொம்பூன்றி
சொந்தமும் பந்தமும் பாசமும்
மண்போட்டு மூடி புதைக்கப்பட்டது

ஏதும் தெரியாத குழந்தைகள்
ஒன்றாக விளையாடி அடிவாங்கின..
உலகைப் புரியாத அவர்களின்
பாசத்தை உலகம் புரிந்துகொள்ளவில்லை
இழப்பு யாருக்கென வருங்காலம்சொல்லும்

நல்ல நாளொன்றில் அதிகாலைப் பொழுதில்
கொட்டித் தீர்த்தது மழை
அடியோடு பிடிங்கி எறியப்பட்டன‌
வேலியில் பூந்திருந்த கொம்புகள்

பொழிந்த மழையில் சமமாக்கப்பட்டு விட்டது
மனிதன் பிரித்துப் போட்ட வயல்வெளி
வயலைச் சேர்த்து வைத்த காற்று
வேலி தாண்டி காட்டிய வேடிக்கையைச் சொல்ல‌
இந்த கவிதையைத் தவிர யாரால் முடியும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-17, 9:47 am)
பார்வை : 72

மேலே