சாதித்தது ஒரு மண்ணும் இல்லை
வேடிக்கை பார்க்கும் உலகை
நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்
வேடிக்கையே வாடிக்கையான உலகை
நாங்கள் வேதனையுடன் பார்க்கிறோம்
நடக்கும் செயலெல்லாம் வேடிக்கை
விபத்து வழிப்பறி கொலை
கொள்ளை திருட்டு தற்கொலை
அத்தனையும் உங்களுக்கு வேடிக்கை
வழியில் நடந்தால் பார்க்கவேண்டியது
முடிந்தால் அதை படமெடுக்கவேண்டியது
நண்பர்களே மனிதனென்றால் பகிருங்களென
சமூக வலைத்தலங்களில் பதிவிடவேண்டியது
இதனால் நீங்கள் சாதித்தது
ஒரு மண்ணும் இல்லை
இனிமேலும் நாங்கள் சொல்லி
நீங்கள் திருந்தப்போவதும் இல்லை