இறுதி ஊர்வலத்திற்கு தயாராய்
உலக "போதை" எதிர்ப்பு தினம்!
என் வயதோ இருபத்தியாறு,
நான் தற்போது
இருப்பதெங்கேப் பாரு,
இனி என்
மனைவி,பிள்ளைகளுக்கு
ஆதரவு யாரு?
தப்புக்கு தண்டனை எனக்கு,
தப்பே செய்யாத இவர்களுக்கு,
தண்டனை எதற்கு?
போதை காட்டிய பாதை
என் இறுதி ஊர்வலத்திற்கானது
இதனால்
என் குடும்பத்தின் வாழ்க்கையோ
இன்று கேள்விக்குறியானது.
இதன் மூலம் நான் தெரிவிக்க நினைப்பது,
"போதை" எனது பாதை அல்ல, என்ற
உறுதி மொழி ஏற்பது
இதை பொருமையுடன் படித்ததற்கு நன்றி .
விடை பெறுகின்றேன்
இவ்வுலகைவிட்டு.
(இள வயதில் போதையால் பலியான நபரின்
குடும்பம்)
#sof #சேகர்

