தனிமை

இது உரங்களின் உறைவிடம்!!!!!!

உணர்வுகளை......
ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்த உகந்த தருணம்.....
அடங்காது திரியும்
நம்
மடங்காத மனதை
மயக்கும் மந்திரம்!!!!!!

உன்னை உனக்கே
ஒளித்திரை இட்டு
உன் விழித்திரை திறக்கும்
விலாசப்படிகம்!!!!!!!

இயல்பை மீறிய
ஏகாந்தம் அடைய
இதுவே முதல் பாடம்!!!!!!!

உறவுகள் மாயை என
இதன்
இரவுகள் உணர்த்தும்!!!!!

மாற்றம் நிகழ
இதுவே மருந்து....
நீ
ஏற்றம் அடைய
உடனே
இதை அணுகு!!!!!

சிறகுகளை விரிப்ப்போம் !!!!
சரித்திரம் படைப்போம்!!!!

எழுதியவர் : GOKUL PRASAD GOPALAN (27-Jun-17, 6:29 pm)
சேர்த்தது : கோகோ
Tanglish : thanimai
பார்வை : 406

மேலே