என்னவளும் என் மொழியும்

[] என்னவளும் என் மொழியும்...


தமிழை விடவும் -
வேறு மொழி இல்லை
அவளின் அழகை சொல்ல..!

வேறவளை சொல்லி
நான் விரும்பவில்லை
என் தமிழை கொல்ல..!

அவளிடம் கருவும்
தமிழிடம் உருவும்
பெற்றுக்கொள்கின்றன
கவிதைகள்...

எனது வரிகள் தமிழுக்கும்
அர்த்தங்கள் மொத்தமாய்
அவளுக்கும் சொந்தமானவை...

சிறப்புகள் அதிகம் தான்
பல மொழிகளில் தமிழுக்கும்
பல பெண்களில் அவளுக்கும்...

அவளால் தமிழையும்
தமிழால் அவளையும்
என்று -
அவளையும் தமிழையுமே
அதிகமாக எழுதுகிறேன்...

அவளின்றி -
தமிழ் மட்டும் இருந்திருந்தால்
அழுது கொண்டே
எழுதிகொண்டு இருந்திருப்பேன்..!

தமிழின்றி -
அவள் மட்டும் பிறந்திருந்தால்
மனதுகுள்ளேயே
புலம்பிக்கொண்டு இருந்திருப்பேன்..!

இரண்டும் சேர்ந்து வரவானது..!
அதனால் வாழ்க்கை வரமானது..!


-யாழ்..

எழுதியவர் : யாழ் கண்ணன் (30-Jun-17, 11:32 am)
பார்வை : 241

மேலே