கரும்பு
வெட்டி வைத்தால் கொட்டி கொடுக்கும்
கட்டு காட்டாய் பார்த்தால் மனம் லயித்திருக்கும்
பட்டி தொட்டியில் பரந்திருக்கும்
நெட்டி நெடிய உயரம் வளர்ந்திருக்கும்
குட்டிக் குழைந்தைக்கும் பிடித்திருக்கும்
காஞ்சி காமாட்சி கையில் இடமிருக்கும்
சொட்டு சொட்டாய் தேன் சாறை வழங்கும்
கூர்ந்து நோக்கினால் வாழ்வின் அர்த்தம் விளங்கும்
நுனிக் கரும்பு குழந்தை போல் இனிதினும் இனிமை
அடிகரும்பு முதிர்ந்த மனிதன் போல் வெறுமை
வாழும் நாளை சுவைத்து வாழ்ந்திடு
துன்பம் வந்தால் கரும்பின் தத்துவத்தை நினைத்திடு
சக்கரை வழங்கும் கரும்பு சக்கரை நோய் வழங்காது
வெல்லம் வழங்கும் கரும்பு உள்ளம் நோக வைக்காது
ரசித்து ரசித்து உண்போம் வாழ்வில் உவகை கொள்வோம்