தம்பியும் நானும்

நொடிக்கு ஒருமுறை அடித்துக்கொள்ளும் சில..
இதயம்,இமைகள்,கடிகாரம்,என் தம்பியும் நானும்...

அவனது 'நாயே' என்ற அழைப்பில் உற்சாகம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்ளும்...

பெற்றோர் அளித்த ' கூட்டுக்களவாணிகள்' என்ற பட்டமே ஆஸ்கராய் இனிக்கும்

என் சோகமெல்லாம் அவன் செவிப்பறை எட்டும் வரையே உயிர்த்திருக்கும்

வீடு கொள்ளாமல் நொறுக்குத்தீனி இருந்தபோதும் அவன் கையில் இருப்பதே எனக்கு ருசிக்கும்...
சண்டையிட்டு பிடுங்க ஆளின்றி அனாதையாய் அவை அழுகிறது..

கூடுதல் தோசை அவன் கேட்கும்போதெல்லாம் திட்டிகொண்டே வார்ப்பேன்...
இன்று கண்ணீர் தெளித்து வார்க்கிறேன்...
அவன் விரைந்து வருவான் என்ற நம்பிக்கையில்....

எழுதியவர் : சாஜிதா (29-Jun-17, 10:57 pm)
Tanglish : Thambiyum naanum
பார்வை : 2424

மேலே