பிறந்ததேனோ

உன்னை இன்றோடு நான் பிரியும்போது
உள்ளம் ரெண்டாக உடைந்ததேனோ?
உள்ளே உனக்கான இதயம் துடிக்க
உயிரும் கண்ணீரில் வருவதேனோ?

தாயை நான் இழந்தும் தவித்ததில்லை
தாயே!! உனைஇழந்து தவிப்பதேனோ?
நீயும் இங்கின்றி நான் நடந்தபோது
நிழலும் எனைத்தொடர மறுப்பதேனோ?

உயிரே, உன்நினைவு என்னை வாட்ட
இரவும் பகலாக எரிவதேனோ?
ஊரே எனைபார்க்கும் பிரம்பை தெரிய
உள்ளம் உனைக்காண முயல்வதேனோ?

வேர்கள் இல்லாமல் மரமா நிற்க்கும்?
நீயும் இல்லாமல் சரிவதேனோ?
பூக்கள் இல்லாமல் தேனா பிறக்கும்?
கண்கள் இல்லாமல் அழுவதேனோ?

கண்ணே! உனையின்றி கவிதை பொழிந்தால்
கவிதை மதிப்பிழந்து போவதேனோ?
பொன்னே!எத்திசையில் நீயும் போனாய்?
பாதை முடியாமல் நீள்வதேனோ?

காலம் இப்படியே கடந்து கொண்டால்
எதற்கு நான்வந்து பிறந்ததேனோ?
உந்தன் நினைவுளை நெஞ்சில் சுமக்க
கவிதை தீயில் உருகத்தானோ???

எழுதியவர் : (29-Jun-17, 5:57 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : piranthatheno
பார்வை : 98

மேலே