என் கவிதைகள்

கற்பனைக் கடலில் மிதந்து வந்தேன்
எண்ண அலைகள் வந்து வந்து மோத
கவிதைகளாய் உருமாறி வந்து வந்து
கிளிஞ்சல்கள் போல் -என் காகிதங்களாம்
கடற்கரையில் தேங்கி வந்து கிடக்கின்றன
என் கவிதை சிதறல்களாய், என் கவிதைகள்,
பெட்டகம்போல் -இந்த கிளிஞ்சல்களில்
முத்துச்சிப்பிகளும் உண்டு
ஜாதி கருநீல முத்துக்களும் உண்டு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-17, 4:52 pm)
Tanglish : en kavidaigal
பார்வை : 95

மேலே