பொய்க்கோபம்
தூரமாய் தெரிந்தாலும்
அருகில்தான்
சிரிக்கிறாய்
மௌனமாய் இருந்தாலும்
மனதோடு
பேசுகிறாய்
வெறுப்பதுபோல் நடித்தாலும்
நேசத்தில்
திளைக்கிறாய்
அன்பின் மழைகொண்டு
ஆன்மாவை
நனைக்கிறாய்
மறப்பதாய் சொல்லிக்கொண்டு
இதயத்தால்
கரைகிறாய்
என்னைவிட்டு...
விலகுவதாய் நினைத்துக்கொண்டு
இரண்டறக்
கலக்கிறாய் !
## மதிபாலன்