புதிரானவள் ---முஹம்மத் ஸர்பான்

அகிலம் மறந்த
கனவைப் போல
மனதை திறந்த
நிஜமும் நீயே
கடலின் ஆழம்
எண் கணிதம்
ஓடும் நதிகள்
முகிலின் மச்சம்
பூந் தோட்டம்
அழகின் விலாசம்
பூவை இவளோ!
அழகின் தேசம்
சுமந்த தாயை
சம்மதம் கேட்டு
இவளைத் தாயாய்
ஏற்றுக் கொண்டேன்
சருகைக் கூட
மிதித்ததில்லை
எறும்புகள் கூட
இவளோடு நட்பு
ஆயிரம் தாரகை
ஒரு வெண்ணிலா
அன்பின் ஆலயம்
என் பெண்ணிலா
பார்வை எனும்
பல்கலைக்கழகம்
விந்தை தேர்வின்
பட்டம் காதல்
மண்புழு போல
ஊர்ந்து போக
கதவைத் தொட்டு
காற்று பேசும்
ஆடைகள் நீங்கி
நின்றால் கூட
என் பார்வை
கற்பிழந்ததில்லை
சந்திக்கும் நேரம்
விழிகள் காரம்
இரவில் தினமும்
தூக்கம் தூரம்!